4 நாட்களுக்கு மழை... சென்னைவாசிகளே உங்களுக்கும் சேர்த்து தான் !!

புதன், 9 ஜூன் 2021 (13:03 IST)
தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல். 

 
தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்