புதிய புயல் - 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெள்ளி, 9 ஜூலை 2021 (14:01 IST)
வங்க கடலில் எதிர்வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

 
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் மத்திய மேற்கு – வட மேற்கு பகுதியில் எதிர்வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது நாளை, நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனியில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தகவல். 
 
மேலும், தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், குமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்