கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.