தங்கம் வென்றவுடன் தந்தையை இழந்த தமிழக வீராங்கனை!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:46 IST)
தங்கம் வென்றவுடன் தந்தையை இழந்த தமிழக வீராங்கனை!
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஒரு சில நிமிடங்களில் தமிழக வீராங்கனை தனது தந்தையை இழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நியூசிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா கலந்து கொண்டுள்ளார் 
 
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என அவருக்கு அவருடைய தந்தை வாழ்த்து கூறி மெசேஜ் அனுப்பினார். இதனை அடுத்து லோகப்பிரியா பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சில நிமிடங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியை தந்தையுடன் பகிர்வதற்காக போன் செய்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

 
தங்கம் வாங்க வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்த தந்தை வெற்றி பெற்றதை கூட பார்க்க முடியாமல் போய் விட்டார் என வீராங்கனை லோகப்பிரியா கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்