தமிழ்நாடு தட்ஷினா பிரதேஷ் என பெயர் மாற்றமா? வானதி சீனிவாசன் பதில்

திங்கள், 29 மார்ச் 2021 (18:21 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றாகிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடங்கள் எல்லாம் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்தை தட்ஷினா பிரதேஷ் என பெயர் மாற்றம் செய்து விடும் என்றும் சென்னையை தனி மாகாணமாக ஆக்கிவிடும் என்றும் தெரிவித்து வருகிறார் 
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்கள் ’இணையத்தில் யாரோ எழுதி விட்டுச் செல்லும் வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் பாஜக கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற பெயர் தக்ஷின பாரத் என மாற்றப்படும் என்ற செய்தி பொய்யானது என்றும் ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோவை தொகுதியில் தான் வெற்றி பெற்றால் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி கொண்டு வர மாநில அரசை வலியுறுத்துவேன் என்றும் அவர் கூறினார். 
 
இந்த தொகுதியில் வானதி சீனிவாசனை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்