சுவாமி சிலை பயபக்தியோடு கடத்தல்: தமிழ் திரைப்பட இயக்குனர் வி.சேகர் கைது

புதன், 12 ஆகஸ்ட் 2015 (23:31 IST)
கோவில் சிலை கடத்தல் வழக்கில், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வி.சேகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சென்னை மேற்கு மாம்பலத்திலிருந்து, ரூ.80 கோடி மதிப்புள்ள 8 பஞ்சலோக சிலைகளை கடத்தி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த  தனலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவர், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், திருடப்படும் சிலைகள் அனைத்தும், இயக்குனர் வி.சேகர் வீட்டில் வைத்து பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்தார்.
 
இதனையடுத்து இந்த வழக்கில் இயக்குனர் வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரை காவல்துறையனர் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்