SWIIGGY நிறுவனம் சம்பளம் குறைப்பு…ஊழியர்கள் போராட்டம்
செவ்வாய், 14 ஜூலை 2020 (17:07 IST)
இந்தியாவில் பிரபல உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு செய்துள்ளதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் இந்த கொரோனா காலத்தில் ஊழியர்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை சில நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.இதனால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
.இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்து வரும் அதன் ஊழியர்களுக்கு நிறுவனம் மாதச் சம்பளத்தையும், ஊக்கத்தொகையையும் ( incentive ) ரூ 5000 அளவுக்கு குறைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
எனவே அதன் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தக் கொரோனா காலத்திலும் மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து வரும் ஊழியர்களுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.