சுவாதி படுகொலையை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

திங்கள், 27 ஜூன் 2016 (11:26 IST)
கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரால் அரிவாளால் கழுத்தில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்த கொலை வழக்கில் யார் கொலை செய்தார் என்பது இன்னமும் தெரியவில்லை. 5 தனிப்படை வைத்து கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். கொலையாளியை பற்றிய தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை காண : ’சுவாதியை வேடிக்கை பார்த்த கையாலாகாத கோழைகள் மீது கோபம் வருகிறது’ - மருத்துவர் ருத்ரன்
 
இந்நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பேட்டியளித்துள்ளார். காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி சுப்பிரமணி கூறியதாவது, சம்பவம் நடந்த அன்று நான் காலையில் பாரிமுனை செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நண்பர்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
 
அப்போது அந்த பெண்ணுடன் 10 நிமிடங்களுக்கு மேல் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. திடீரென்று அந்த வாலிபர் பையில் வைத்திருந்த அரிவாளால் அந்த பெண்ணை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

மேலும் இதனை காண : ’இதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது’ - சுவாதியின் தந்தை உருக்கம்
 
அரிவாளால் வெட்டப்பட்ட அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நான் மேலிருந்து இறங்கி ஓடினேன். ஆனால் ஒருவர் கூட அந்த கொலையாளியை பிடிக்க முன்வரவில்லை. எல்லோரும் சேர்ந்து விரட்டியிருந்தால் அவனை பிடித்திருக்கலாம். ஆனால் யாரும் முன்வராதது வேதனையளிக்கிறது என்றார் அவர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்