சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறை, கடைசியில், நெல்லையில், கொலையாளி ராம்குமார் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனயைடுத்து, ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சுவாதி குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை உடனே கைது செய்த காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும், தங்களுக்கு ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.