இந்நிலையில் சென்னையில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து விவாதித்து வருகின்றனர்.
சுவாதி படுகொலை செய்யப்பட்டு 2 மணி நேரம் ரயில் நடைபாதையிலே கிடந்துள்ளார். அவருக்கு உதவவோ, கொலை செய்தவனை பிடிக்கவோ, சுவாதியை மருத்துவமனையில் சேர்க்கவோ யாரும் முன்வரவில்லை.