ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு உள்ளதா?: கருத்துக்கணிப்பு முடிவு!

சனி, 22 அக்டோபர் 2016 (13:05 IST)
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்று மக்கள் யார் பக்கம் என்ற கருத்துக்கணிப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதில்  தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற அடிப்படையில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி மக்கள் கருத்தை பதிவு செய்கின்றனர்.


 
 
தொகுதிவாரியாக நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பை தற்போது வெளியிட்டு வருகின்றன. அதே போல முதல்வர் ஜெயலலிதா குறித்தும் கருத்துக்கணிப்பு நடத்தியது. மக்களின் மதிப்பீடு எவ்வாறு உள்ளது என்பதை தற்போது வெளியிட்டுள்ளது.
 
மக்களிடம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்ல மதிப்பு உள்ளதாகவே கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது. தானியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் முதல்வர் ஜெயலலிதா குறித்து மக்களின் மதிப்பீடு நன்றாக உள்ளது என 37 சதவீத மக்களும், சரியில்லை என 27 சதவீத மக்களும், சராசரி என 18 சதவீத மக்களும், இப்போதே சொல்ல முடியாது என 12 சதவீத மக்களும் கருத்து இல்லை என 6 சதவீத மக்களும் கூறியுள்ளனர்.


 
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தற்போது உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது அதிமுகவினருக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்