விஷாலுக்கு இயக்குனர் அமீர் மற்றும் சேரன் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலான திரையுலகினர் அவருடைய அரசியல் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், 'விஷால் உண்மையானவர் என்றும், அவருக்கு ஓட்டு போடுங்கள்' என்றும் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்' என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷாலுக்கு ஓட்டு போடுங்க..மக்களுக்காக உண்மையா உழைப்பாரு, இது என் கருத்து' என்று கூறியுள்ளார்.