சுருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது திமுகவினர்களா? பாஜகவினர்களா? மாறி மாறி குற்றச்சாட்டு..!
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:24 IST)
ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட சுருக்கா வினோத்தை பாஜகவினர் ஜாமினில் எடுத்தார்கள் என திமுகவும், திமுகவினர்கள் தான் ஜாமினில் எடுத்தார்கள் என பாஜகவும் மாறி மாறி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழக ஆளுநர் ரவி மாளிகை முன்பு சுருக்கா வினோத் என்பவர் எரிபொருள் நிரப்பிய வெடிகுண்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இதற்கு முன் இவர் பாஜக அலுவலகம் மீது இதே போன்ற ஒரு குண்டு வீசிய வழக்கு இருக்கும் நிலையில் அந்த வழக்கில் அவரை ஜாமீன் எடுத்தது பாஜக வழக்கறிஞர் தான் என திமுக ஆதாரத்துடன் செய்து வெளியிட்டுள்ளது
புள்ளி இந்த நிலையில் ஏற்கனவே இன்னொரு வழக்கில் சுருக்கா வினோத் கைது செய்யப்பட்டபோது அவரை ஜாமின் நிலை எடுத்தது திமுகவினர் தான் என்று பாஜகவும் ஆதாரத்துடன் செய்து வெளியிட்டுள்ளது.
சுருக்கா வினோத்தை திமுகவினர் மற்றும் பாஜகவினர் மாறி மாறி ஜாமீனில் எடுத்து உள்ள நிலையில் அவர் உண்மையில் யார் என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மக்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது