பேரறிவாளன் விடுதலை: ஆளுனருக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:08 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய தாக்கல் செய்த வழக்கில் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானம் குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் கவர்னர் உள்ளதால் இது குறித்த வழக்கு ஒன்று பேரறிவாளன் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரணைக்கு வந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய எடுக்கும் முடிவு மத்திய அரசின் கையில்தான் உள்ளது என வாதிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நடந்த விசாரணையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும் பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார காலம் அவருக்கு அவகாசம் வழங்கப் படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
அதற்குள் தமிழக ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் பேரறிவாளன் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்படும் என தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்