இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என 17 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 3வது நீதிபதியாக சத்தியநாராணனை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், நீதிபதி விமலா மீதான குற்றச்சாட்டை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.