வரார்! வரார்! சன்னி லியோன் சென்னை வரார்!

திங்கள், 13 ஜூன் 2016 (10:59 IST)
இந்தி திரை உலகில் கலக்கி வரும் பிரபல நடிகை சன்னி லியோன் சென்னைக்கு வருகிறார். பெண்கள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.


 
 
சமூகத்தில் இருக்கும் பழமையான குணங்களில் இருந்து இந்திய பெண்கள் விடுபடுவது குறித்தான நிகழ்ச்சி ஒன்று சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது.
 
இந்தியா முழுவதும் பெண்களை மேம்படுத்தும் தொண்டு நிறுவனம் சார்பாக ஃபையர் மற்றும் ஐஸ் நிகழ்ச்சி நடத்துகின்றனர். டினாக்க மீடியா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறது. வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவர்ச்சி புயல், பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் பின்னணி பாடகி நேஹா கக்கார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்