இடியுடன் கோடை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

புதன், 10 மே 2017 (16:29 IST)
தமிழகத்தின் உள்மவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 

 
கடந்த ஆண்டு பருவ மழை பொய்துபோனதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடை கால வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
 
நேற்று சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனந்த இடியுடன் லேசான மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் குளுமையான காற்று வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கோடை மழையில் இடி மின்னல் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்