சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர்.. விரைவாக அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்..!

வியாழன், 30 நவம்பர் 2023 (07:39 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் அந்த நீரை  அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

துரைச்சாமி, அரங்கநாதன், பெரம்பூர், கணேசபுரம் ஆகிய நான்கு சுரங்க பாதையில் மழைநீர் தங்கி இருந்த நிலையில் அந்த நீர் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டதாகவும் தற்போது இந்த சுரங்க பாதைகள் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அதேபோல் தியாகராய நகர் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் மட்டும்  மழை நீர் தேங்கி உள்ளதாகவும் அதை அகற்றும் பணியில் தற்போது சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

சென்னையில் மழையின் காரணமாக ஐந்து மரங்கள் விழுந்து உள்ளதாகவும் ஆனால் அவை அனைத்தும் இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்