விமானப்படைக்கு பயணத்தொகை செலுத்திய துணை முதல்வர்...

சனி, 20 அக்டோபர் 2018 (20:04 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தன்சகோதரர் ஓ.பாலகிருஷ்ணன்உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது இக்கட்டான சூழ்நிலையில் அவரை தேனியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவந்து சிகைச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் துணைமுதல்வரின் சகோதரர் என்பதால் தான் விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது என சராமாரியாக விமர்சனங்கள் எழுந்தன.
 
இதனையடுத்து தன் சகோதரர் சிகிச்சைக்கு சமயத்தில்  உதவியதற்கு  நன்றி செலுத்தும் பொருட்டு டெல்லியில் உள்ள பாதுகாப்புதுறை அமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்புதுறை மந்திரியாகவுள்ள நிமலா சீதாராமனை சந்திப்பதற்காக சென்றார்.
 
ஆனால் பன்னீர் செல்லத்தை பார்ப்பதை நிராகரித்து விட்டார் நிர்மாலா சீதாராமன்.இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சரின் மீது  பல்வேறு விமர்சனங்கள்  முன்வைக்கப்பட்டன.
 
இது நடந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தன் சகோதரை உடல்நிலை சரியில்லாட போது அவசரமாக சென்னைக்கு கொண்டு செல்ல விமான படையின் தனி விமானத்தை பயன்படுத்தியற்கான பயணக்கட்டமான ரூ 14.91 மத்திய பாதுகாப்புத்துறை கணக்குக்கு செப்டம்பர் 11ம் தேதி வரைவோலை மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது ஆளும் கட்டியின் முதலமைச்சர் முதற்கொண்டு பல அமர்ச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்த   நிலையில் துணைமுதல்வர்  தமிழக அரசு மூலம் இந்தபயணத்தொகையான ரூ.14.91செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்