ஜெ கல்லறையில் எடப்பாடி தியானம் எப்போது?: சுப.வீர்பாண்டியன் கேள்வி

திங்கள், 13 மார்ச் 2017 (11:57 IST)
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வாக்குகளை கைப்பற்ற துடிக்கும்  தலைவர்கள் தற்போது கையாண்டுவரும் வழி தியானம்.திடீரென ஜெ. சமாதிக்கு சென்று தியானம் செய்வதும்,பின்னர் செய்தியாளரகளிடம் பரபரப்பாக ஏதாவது ஒன்றை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

 

சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் திடீரென ஜெயலலிதா  சமாதியில் அமர்ந்து 45 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் அன்று பேசிய வார்த்தைகள் சசிகலாவிம் முதல்வர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது.  நாங்கள்தான் உண்மையான திமுக என்று கூறி வெளியேறிய பன்னீருடன் 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி எம்.பி.க்களும் ஆதரவு தந்தனர். பொதுமக்கள் ஆதரவும் அவருக்கு அதிகரிக்கவே செய்தது.

அதேபோன்று சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மூன்று முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்தார்.


இந்த நிலையில்  நேற்று இரவு 8.30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெ.வின் சமாதிக்கு தீபா வந்தார். அதன் பின் சுமார் 40 நிமிடம் அங்கு தியானம் இருந்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ நான் அரசியல்லுக்கு வந்த பின் ஏராளமான மிரட்டல்கள் வருகிறது. என்னை கொலை செய்து விடுவதாக கூலிப்படையினர் மிரட்டுகின்றனர்.  முக்கியமாக, ஆர்.கே. நகர் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என மிரட்டுகின்றனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் இது  குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர்  சுப.வீர்பாண்டியன் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், ஜெ கல்லறையில் தீபா 45 நிமிடங்கள் தியானம். பன்னீரை விட 5 நிமிடங்கள் கூடுதல். அடுத்து வருபவர் 50 நிமிடங்களாவது அமர வேண்டும். எடப்பாடி எப்போது? என்றும், "ஜெயலலிதா என்ன யோகா டீச்சரா?"என்றும் பதிவிட்டுள்ளார்.

ஜெ கல்லறையில் தீபா 45 நிமிடங்கள் தியானம். பன்னீரை விட 5 நிமிடங்கள் கூடுதல். அடுத்து வருபவர் 50 நிமிடங்களாவது அமர வேண்டும். எடப்பாடி எப்போது?

— SubaVeerapandian (@Suba_Vee) March 12, 2017
 

வெப்துனியாவைப் படிக்கவும்