இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக் கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் உள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்களில் வராக்கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அடிமாட்டு விலைக்கு விற்று, முழுத் தொகையையும் மாணவர் களிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்தியாவில், தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வழங்கப்பட்ட ரூ.61,176 கோடி கல்விக் கடனில், தமிழகத்திலிருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியை கடன் பெற்றுள்ளனர். இதில், ரூ.1,875.56 கோடி மட்டும் வாராக்கடனாக உள்ளது.