கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா எழுநூற்று மங்கலம் கிராமத்தில் வசித்துவரும் தர்மதுரை(20) இவர் கொங்குநாடு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக காலையில் குளித்துவிட்டு ஈரத்துடன் வீட்டில் உள்ள மின்சார போர்டில் மின் சுவிட்சை இயக்கும்போது மின்சாரம் தாக்கி அங்கேயே விழுந்துள்ளார்.