மக்கள் நீதி மய்ய வேட்பாளரை கடித்த நாய்! – ஓட்டு கேட்டபோது விபரீதம்!

சனி, 12 பிப்ரவரி 2022 (08:55 IST)
தாம்பரம் அருகே தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க சென்ற மநீம வேட்பாளரை நாய் கடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி 2-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று அனகாபுத்தூர் பாலாஜி நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துள்ளார். அப்போது 11வது தெருவில் இருந்த தெரு நாய் ஒன்று தினகரனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதனால் காயமடைந்த தினகரன் மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொண்டுள்ளார். 2வது வார்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளதாகவும், தான் வெற்றி பெற்றால் தெரு நாய்கள் தொல்லையை ஒழிப்பேன் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்