சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புகைப்பட கலைஞராக இருந்த ஸ்டில் கேமிராமேன் சிவா தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றுக்காக தேனி சென்றிருந்தார். படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளாகிய்து. இந்த விபத்தில் கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இவருடன் பயணம் செய்த நடிகர் குரும்பன் என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், ரஜினி முருகன் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் குரும்பன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
உயிரிழந்த ஸ்டில் கேமராமேன் சிவா விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தேனி போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.