முதல்வர் பதவி மீது ஸ்டாலினுக்கு ஒருதலைக் காதல் - அமைச்சர் உதயகுமார்

சனி, 25 ஜனவரி 2020 (21:02 IST)
முதல்வர் பதவி மீது ஸ்டாலினுக்கு தீராக காதல் உள்ளது என தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது :
 
ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது தீராத மோகம் கொண்டுள்ளார். அதனால் எப்படியாவதும் முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதில் எதிலுமே அவரால் வெற்றி பெற முடியவில்லை. முதல்வர் பதவி மீது அவருக்கு ஒருதலைக்காதல் உள்ளது. ஸ்டாலின் மேற்கொண்டு வரும் போராட்ட நாடகங்கள் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்