ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை மலர வைப்போம் - உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சனி, 20 ஜூலை 2019 (19:37 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி நன்றாக பிரச்சாரம் செய்தும் படுதோல்வியை சந்தித்தது. அதிமுக மட்டும் ஒரே தொகுதியில் வெற்றி பெற்றது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற  நடிகரும், முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி தீவிரமாக  பிரச்சாரம் செய்தார். தேர்தல் வெற்றிக்கு அவரது பிரசாரம் முக்கியக் காரணமாக இருந்ததாக் கூறி திமுக  தலைவர் ஸ்டாலின் அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவியைக் கொடுத்தார். இதனை தொண்டர்களும் வரவேற்றனர்.
 
இந்நிலையில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 40 ஆம் ஆண்டின் துவக்க நாள் இன்று. எனவே உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதுதான், இளைஞரணியினரின் இலக்காக உள்ளது. இளைனர் அணி செயலரின் பதவி எனக்கு மலைப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்தப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. அது மனதை திடப்படுத்தும். செயல்பாட்டின் மூலமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச்செல்வோம் இவ்வாறூ தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்