ஸ்டாலின் முதல்வரானால் ஆண்டி கையில் கிடைத்த பானையாகிவிடும் தமிழகம்: எச்.ராஜா

சனி, 17 ஜூன் 2017 (04:32 IST)
தமிழகத்தை பொருத்தவரையில் பாஜகவுக்கு தற்போது பிரச்சனைகுரிய கட்சியாக இருப்பது திமுக மட்டுமே. எனவே பாஜகவின் தமிழக தலைவர்கள் திமுகவை மட்டுமே குறி வைக்கின்றனர்.



 


இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, 'ஒருவேளை ஸ்டாலின் தப்பித்தவறி முதல்வரானால் தமிழகம் நந்தவனத்து ஆண்டி கையில் கிடைத்த பானையாகி விடும் என்று கூறியுள்ளார்.

மேலும் அரசு சுற்றறிக்கையை கூட படிக்க தெரியத ஸ்டாலின் தமிழக முதல்வராக எப்படி ஆக முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர்  கருணாநிதி அளவிற்கு சாதுர்யம் இல்லாதவர் ஸ்டாலின் என்றும், .திமுகவின் அஸ்தமனத்தில் தான் தமிழர்களுக்கு விடியல் " என்றும் கூறினார்

மேலும்  தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பாஜகவிற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது என்று கூறிய அவர் திமுக ஊழலின் ஊற்றுக்கண். மக்கள் அவர்களை அடுத்த ஆட்சியில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவை அய்யாக்கண்ணுவிடம் அடமானம் வைத்துவிட்டு அய்யாக்கண்ணுவிடம் பினாமி கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் பாஜக குறித்து பேசுவது வியப்பாக உள்ளது. என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்