”மனம் கனக்கிறது!” ஸ்டாலின் கண்ணீர் டிவிட்

Arun Prasath

சனி, 26 அக்டோபர் 2019 (12:08 IST)
”மனம் கனக்கிறது. சுஜித்தை எப்படியாவது உயிருடன் மீட்டாக வேண்டும்” என மனம் கலங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.







நேற்று மாலை 5.40 மணி அளவில், திருச்சி நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சிறுவனான சுர்ஜித் தவறி விழுந்தத்தை தொடர்ந்து 17 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

கிட்டதட்ட 129 அடி ஆளமுள்ள கிணற்றில் குழந்தை 70 அடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சற்றுமுன் பேரிடர் மீட்பு குழு விரைந்து வரவுள்ளதாக தகவல் வெளியானது. அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது.

முன்னதாக சுஜித்தின் மேல் மண் மூடியிருந்த நிலையில் தற்போது மண்ணை அகற்றி ஒரு கருவியால் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குழந்தை அசைவின்றி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ”மனம் கனக்கிறது!! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதை போல் நாமும் துடிக்கிறோம்” என கூறியுள்ளார்.

மேலும் ”அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும், தொடர்ச்சியாக இது போன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்