மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியின் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதாவது, கருணாநிதி தனக்கு யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அப்படியே விடாமல் சரி செய்து விடுவார்.
மேலும், கட்சியை விட்டோ தன்னை விட்டோ யார் பிரிந்து சென்றாலும், அவர்களை கூப்பிட்டு பேசி தன் பக்கம் இழுத்து கொள்வார். இந்த ஃபார்முலாவைதான் தற்போது ஸ்டாலின் பின்பற்றி வருகிறார்.