அன்பு சகோதரரின் சமூக பணி தொடர வேண்டும்! – திருமாவளவனுக்கு சசிகலா வாழ்த்து!

புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:36 IST)
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் சசிக்கலா அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலில் தலித் மக்களின் குரலாக தொடர்ந்து ஒலித்து வருபவர் தொல்.திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கிய இவர் தற்போது லோக் சபா எம்.பியாகவும் உள்ளார். இன்று திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவனை வாழ்த்தியுள்ள சசிக்கலா “அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்