ஸ்ரீரங்கம் கோயில் கிணற்றில் புதையலா? கோடிக்கணக்கில் நகைகளா? விளக்கம் அளித்த நிர்வாகம்

Siva

செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (15:06 IST)
ஸ்ரீரங்கம் கோயில் கிணற்றில் புதையல் இருப்பதாகவும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் இது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் 1500 அடி ஆழ கிணறு உள்ள நிலையில் அந்த கிணற்றை சமீபத்தில் சுத்தம் செய்த போது தங்கம் வெள்ளி ஆகியவை புதையல் கிடைத்ததாகவும் கோவில் நிர்வாகம் அதை கணக்கில் காட்டாமல் பதுக்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது

இந்த நிலையில் இது தவறான தகவல் என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் கூறிய போது ’ஒவ்வொரு ஆண்டும் கிணற்றை சுத்தம் செய்வது வழக்கம், அதன்படி தான் பத்து நாட்களுக்கு முன்னால் சுத்தம் செய்தோம்,அதில் சிலரை காசுகள் மட்டும் தான் இருந்தன, இவை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிணற்றில் போட்டுவிட்ட காசுகள் ஆகும்

இந்த காசுகள் மாத கணக்கில் நீரிலிருந்ததால் கருப்பாக மாறிவிட்டது. தற்போது அந்த சில்லறை காசுகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோடிக்கணக்கில் பணம் நகை கிடைத்ததாக அதை திரித்து தகவல் பரப்பி விட்டனர் என்று கோவில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்