இதன்படி மதுரையில் இருந்து பிகானேருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - பிகானேர் இடையே அக்டோபர் 22, 29 மற்றும் நவம்பர் 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் சென்னை- கயா, புவனேஷ்வர்- புதுச்சேரி ஆகிய மார்க்கங்களிலும், சென்னை-கயா சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது