தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாகி கடுமையான வறட்சி நிலவி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ள அருவிகளில் முற்றிலுமாக தண்ணீர் வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளிக்கின்றது.
தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு முற்றிலும் நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது, இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.