மஹாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை.. கிளாம்பாகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்..!

Mahendran

புதன், 6 மார்ச் 2024 (09:58 IST)
மஹாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை வருவதை அடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை முதல் மார்ச் 9ஆம் தேதி வரை 1360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது 
 
மஹாசிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை அடுத்து வார விடுமுறையும் வருவதால் ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது,  மஹாசிவராத்திரி தினத்தில் அனைவரும் குலதெய்வ வழிபாடு செய்வார்கள் என்பதால் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் நாளை முதல் மார்ச் 10ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது
 
சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நாளை முதல் கூடுதலாக இயக்கப்படும் என்றும் அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் கூடுதல் பேருந்து கொள்ள இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஞாயிறு மாலை சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை பொறுத்து பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்கூட்டிய பயணத்தை திட்டமிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்