குலசை தசரா திருவிழா; சென்னை, கோவையில் சிறப்பு பேருந்துகள்!

புதன், 21 செப்டம்பர் 2022 (10:36 IST)
குலசேகரன்பட்டிணத்தில் நடைபெற உள்ள தசரா திருவிழாவிற்காக சென்னை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்த மாதம் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.

ALSO READ: தீபாவளி பண்டிகை - அரசுப் பேருந்துகளிலும் முன்பதிவு தொடக்கம்

தசரா திருவிழா செப்டம்பர் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது. குலசை தசரா திருவிழாவை காண உள் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வருகை தருவர்.


இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து குலசேகரன்பட்டிணத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் 4ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தசரா விழா முடிந்து திரும்ப அக்டோபர் 6 முதல் 10ம் தேதி வரையிலும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்