புனித வெள்ளி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Mahendran

செவ்வாய், 26 மார்ச் 2024 (15:58 IST)
புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வரும் மார்ச் 28 அன்று 505 பேருந்துகளும், மார்ச்  29 அன்று 300 பேருந்துகளும், மார்ச்  30 அன்று 345 பேருந்துகளும் இயக்கம் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

அதேபோல் விடுமுறை முடிந்து ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயல்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்