சபாநாயகர் உள்நோக்கத்துடன் சாதியை குறிப்பிட்டு பேசினார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

திங்கள், 20 பிப்ரவரி 2017 (21:01 IST)
தமிழக சட்டசபையில் சாபாநாயகர் சாதியை குறிப்பிட்டு பேசியதில் உள்நோக்கம் உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் திமுக கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடத்த கோரி அமளியில் ஈடுப்பட்டனர். இதில் சபாநாயகர் தன் சட்டையை திமுகவினர் கிழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் சட்டசையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
இதைத்தொடர்ந்து சென்னை மெரினா காந்தி சிலையில் அருகில் ஸ்டாலினுடன் திமுக கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல்துறை அவர்களை கைது செய்தனர். இதனிடையே சட்டசபையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் நேராக ஆளுநரை சந்தித்து, தாம் சட்டசபையில் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
 
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின் கூறியதாவது:-
 
ஒட்டு மொத்தமாக சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற முடியாது. உறுப்பினர்களின் பெயரை சொல்லித்தான் வெளியேற உத்தரவிட முடியும் என்றும் விளக்கம் அளித்தோம். இதனிடையே எதிர் கட்சிகளே இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சபாநாயகர் ஜாதியை குறிப்பிட்டு பேசினார். அவர் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்