சப்புனு முடிந்த முதல் நாள்: தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:30 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். 
 
கொரோனா காரணமாக ஒத்துவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேறனர். 
 
இன்று முதல் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு மரணம் குறித்த விஷயங்களை எழுப்ப திமுக தயாராகி வருகிறது என்பதும் அதற்கு பதிலடி கொடுத்த அதிமுகவும் தயாராகி உள்ளது எனவும் இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்