குழந்தை போல கவனிக்கும் கருணாநிதி: சோனியா காந்தி பிறந்த நாள் வாழ்த்து (வீடியோ இணைப்பு)

சனி, 3 ஜூன் 2017 (09:55 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. மேலும் சட்டசபையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கருணாநிதிக்கு வைர விழா எடுக்கப்படுகிறது.


 
 
இதனையொட்டி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த வைர விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் கருணாநிதியை வாழ்த்த உள்ளனர். ஆனால் இந்த விழாவில் விழா நாயகராகிய கருணாநிதி உடல் நலக்குறைவால் கலந்துகொள்ள மாட்டார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
 
ஆனால் கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிறந்தநாளான இன்று அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடிதம் வாசித்து காட்டப்பட்டது. அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் அரசியல் நிகழ்வுகள், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வரை தவிர்த்தும் குறைத்துக்கொண்டும் வருகிறார். அதேபோல இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் வைர விழாவுக்கு அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

 

 
 
இதனால் சோனியா காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் தனது பிறந்தநாள் வாழ்த்தை சோனியா காந்தி கடிதம் மூலமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளார்.
 
சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது உதவியாளர் படித்து காட்டி புரிய வைக்கிறார். இதனை மிகவும் உன்னிப்பாக ஒரு குழந்தையை போல கருணாநிதி கவனிக்கும் வீடியோ வெளியாகியுள்ளாது. அப்போது அவரது மருத்துவர்களும் அவருடன் உடன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்