சென்னை முகப்பேர்கிழக்கு டி.வி.எஸ். அவென்யூவைச் சேர்ந்தவர் சத்தியகுமார்(30) என்ஜினீயரிங் முடித்துவிட்டு தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர், தற்போது சிறிதுகாலமாக சத்தியகுமார் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக தெரிகிறது.
சத்தியகுமார் அடிக்கடி தாயார் ஜோதிபிரபாவிடம்(60) தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, அதில் ஆத்திரம் அடைந்த சத்தியகுமார், கட்டிலில் படுத்திருந்த ஜோதிபிரபாவை கட்டிலோடு தூக்கிச்சென்று வீட்டில் உள்ள 15 அடி ஆழ கிணற்றில் வீசியுள்ளார்.