வடநாட்டில் இருந்து வந்து, தமிழகத்தின் கடலூரில் வாழ்ந்து வருபவர் பூனம்சந்த். பாம்புகளை உயிருடன் பிடிப்பதில் இவர் கில்லாடி என்பதால், அந்த பகுதிகளில் வீடுகளில் பாம்புகள் புகுந்து விட்டால் இவரைத்தான் அழைப்பார்கள். அந்த பகுதியில் இதுவரை ஆயிரம் பாம்புகளுக்கும் மேல் இவர் உயிருடன் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாம்புகளை கொல்லக் கூடாது என்பது பூனம்சந்தின் கொள்கையாகும். எனவே, பாம்புகளை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பிய அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.