சென்னையின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், பொழிச்சலூர் மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நில அதிர்வு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் அதில் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் தெருக்களில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்தது.