காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் மருமகள் பாஜகவில்.. தொடரும் கட்சி தாவல்..!

Siva

ஞாயிறு, 31 மார்ச் 2024 (07:53 IST)
தேர்தல் நேரம் வந்துவிட்டாலே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவி வரும் அரசியல்வாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மகாராஷ்டிரா மாநில சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்து உள்ள நிலையில்  மேலும் ஒரு சிலரும் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் மருமகள் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் என்பவர் பாஜகவில் சேர்ந்துள்ளார். அவர் மும்பையில் உள்ள துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கு சென்று தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார்.  

பாஜகவில் இணைந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் பிரதமர் மோடியின் ஆட்சியில் எனக்கு அவருடைய அனைத்து திட்டங்களும் பிடித்து போனது, எனவே தான் பாஜகவில் பணிபுரிய இணைந்து உள்ளேன் என்று கூறியுள்ளார்  

இந்த நிலையில் பாஜகவில் இணைந்துள்ள சிவராஜ் பாட்டீல் மருமகளுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்