சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் படுகாயம்

வியாழன், 28 ஏப்ரல் 2016 (13:20 IST)
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.


 

 
சிவகாசியை அடுத்துள்ள வடப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில், பட்டாசு தாயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
 
காயமடைந்த அந்த இரண்டு தொழிலாளர்களும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இந்த விபத்துக் குறித்து விசாரனை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இடைவிடாமல் நடந்துக் கொண்டிருக்கும் பட்டாசு ஆலை வித்திலிருந்து, பட்டாசு தொழிலாளர்களுக்கு எப்போது விடிவு காலம் என்று தெரியவில்லை.
 
இதுகுறித்து, அரசாங்கம் பல முறை பட்டாசு ஆலை உள்ளமைப்பு விதி மற்றும், தொழிலாளர்களுக்கான பாதுக்காப்பு முறை விதி, அமைத்தும் வெடி விபத்து தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருப்பதுதான் பெரும் அவல நிலையாக உள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்