கண்ணமங்கலம் அருகே ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடை ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
கண்ணமங்கலத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடிப்பூரம் விழா நடந்தது.
இதில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் பக்தர்கள் வடைகள் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அந்த வடைகளில் 7 வடைகள் ஏலம் விடப்பட்டது. அதில் முதல் வடை ரூ.11 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது.