சூர்யாவின் 'எஸ்3' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (06:19 IST)
ஹரி இயக்கத்தில், சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து 'சிங்கம்' 3 ஆம் பாகமான 'எஸ்3' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 


 
 
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும், பத்திரிக்கையாளர் வேடத்தில் ஸ்ருதி ஹாசனும் நடித்து வருகிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
 
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்