தடுப்பூசி எங்கடா டேய்? – தடுப்பூசி வழங்காதது குறித்து சித்தார்த் ட்வீட்!

சனி, 1 மே 2021 (10:56 IST)
இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக முன்னதாக அறிவித்திருந்தும் தற்போது தடுப்பூசி போடாதது குறித்து நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நாடெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 1.33 கோடி பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு இதற்கான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படாததால் 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாதது குறித்து ட்விட்டரில் நடிகர் சித்தார்த் “தடுப்பூசி எங்கடா டேய்?” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக பாஜக அரசை விமர்சித்தது குறித்து அவருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இந்த பதிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்