கடந்த சில மாதங்களாக சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது/ இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என டெல்லியில் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்