நாளைய ஊரடங்கு தளர்வை அசால்டா நினைக்கக்கூடாது - மக்களுக்கு அரசு எச்சரிக்கை!

சனி, 22 மே 2021 (17:33 IST)
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவக் குழு பரிந்துரைத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். எனவே இன்றும் நாளையும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து மக்களுக்கு பாதுகாப்பு குறித்த கவனத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு,  இன்று வரை மக்கள் கடைபிடித்து வரும் சமூக இடைவெளி, வீட்டை விட்டு வெளியே வராமலும் இருந்து வருகிறார்கள். ஆனால், நாளை கொடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை லேசாக எடுத்து கொள்ள வேண்டாம். மிக கவனமாக வெளியே சென்று வாருங்கள் என அரசு அறிவித்துள்ளது. 

எனவே வீட்டு தனிமையில் இருப்போரும் கூட, தொற்று பாதிப்பில் இருந்து சமீபத்தில் குணமானோர் கூட  தேவையான பொருட்கள் வாங்க நாளை வெளியே வரலாம். பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடியுங்கள். முககவசம் அணிந்தே வெளியே செல்லுங்கள்.  மக்களின் பாதுக்காப்பு கருதி கூறுகிறது எமது வெப்துனியா குழு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்