மதுரை ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சி – 5 கடைகளுக்கு நோட்டீஸ்
வியாழன், 5 மே 2022 (15:26 IST)
மதுரையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இன்று மதுரையில் உள்ள ஷவர்மா விற்பனை செய்யும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் 5 கடைகளில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரிய வந்துள்ளது.
10 கிலோ காலாவதியான கோழி இறைச்சியை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் 5 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.